வணக்கம்,

2 comments
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த திரு.கணேசன் என்பவர் தங்கள் பகுதியில் பழுதடைந்த / மிகுந்த அபாய நிலையில் இருந்த ஒரு பாலத்தை புதியதாக கட்ட வேண்டுகோள் விடுத்தது அதில் வெற்றியும் பெற்றார்.
இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? இவர் அதற்காக செய்த முயற்சிகளை கீழுள்ள எல்லா செய்திகளையும் படித்த பிறகு தங்களுக்கு நிச்சியாம்மாக புரியும். இந்த தகவல்களை  இணையத்தளத்தில் / வலை பூவில் வெளி இடுவதில்  நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

எங்கள் வேண்டுகோள் : புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த பாலத்திற்கு திரு. கணேசன் பாலம் என்று பெயரிட  வேண்டும் என்பது தான்.

யார் இந்த கணேசன் ?

2 comments
திரு.கணேசன் என்பவர் தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதியை சார்ந்தவர்.
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட மற்றும் வது வார்டு ஆகும். இந்த வார்டில் சுமார் குடியருப்புகள் உள்ளது. இந்த பகுதீன் மக்கள் தொகை சுமார் ஆகும். அதுமட்டும் இல்லாமல் அன்னசாகரம் ஊரை சுற்றி இக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இவர்கள் தர்மபுரி நகருக்கு வர வேண்டும் என்றால் அன்னசாகரம் தருமபுரிஐ இணைக்கும் சனத்குமார் பாலம் வழியாக தான் வரவேண்டும். (இந்த பாலம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக பெரியோர்கள் கூறுகிறார்கள் )
இந்த பாலம் கடந்த ஐந்து  ஆண்டுகளுக்கு முன்பு மலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது

அன்னசாகரம் மேம்பாலம் - முயற்சி தொடங்கிய நாள்

0 comments
03-12-2007

முதல் முயற்சி - முதல் மனு நாள் : 03-12-2007 ; தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுப்பியது

1 comments

முதல் மனுவிற்கு (தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய) பதில் வராததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் 03-01-2008 அன்று ஒரு மனுவினை (பொது தகவல் அதிகாரிக்கு )அனுப்பினார்

0 comments

மனு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்-இருந்து நகராட்சி அலுவலகத்திற்கு செல்கிறது

0 comments
மனு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்-இருந்து நகராட்சி அலுவலகத்திற்கு செல்கிறது

மனுவிர்க்கான பதில் கடிதம் தர்மபுரி நகராட்சி அலுவலகதில்லிருந்து

0 commentsபதில் - திருப்திகரமாக இல்லை; மேல் முறையீடு

0 comments
முதல் கேள்விக்குரிய பதில் -
மேம்பாலம் பொதுப்பணி துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது
நகராட்சிளில் மேம்பாலம் அமைக்க வழிவகை இல்லை
- இது முற்றிலும்  தவறானது
இதனை உறுதி செய்வதற்காக மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மேல் முறையீடு செய்கிறார்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மனுவை தட்டிகளிப்பது

0 comments

நேரடியாக மாநில தகவல் ஆணையத்திற்கே மேல் முறையீடு செய்கிறார்

0 comments

மாநில தகவல் ஆணையத்திலிருந்து தர்மபுரி ஆட்சியருக்கு கடிதம் வருகிறது அதன் நகல் மனுதாரர் திரு.கணேசனுக்கும் வருகிறது

0 comments

ஒரு நாளில் பதில் கொடு - தர்மபுரி மாவட்ட ஆட்சியாரின் நேர்முக உதவியாளர் தர்மபுரி நகராட்சி ஆணையருக்கு கடிதம்; அதன் நகல் மனுதாரர் திரு.கணேசனுக்கும் வருகிறது

0 commentsமின்னல் வேகத்தில் பதில்

0 comments
ஒரு நாளில் பதில் தயார் - மேம்பாலம் (சனத்குமார் மேம்பாலம் ) தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்டது என்று தகவல்


நிதி ஒதிக்கீடு செயும்மாறு வேண்டுகோள்

0 comments
அன்னசாகரம் மேம்பாலம் (சனத்குமார் மேம்பாலம் ) கட்ட நிதி ஒதுக்குமாறு
தர்மபுரி சட்டமன்ற உறுப்பினருக்கும் (திரு.வேலுசாமி)
தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினருக்கும் (மருத்துவர் .திரு.செந்தில் )
ஆகியோருக்கு கடிதம் எழுதுகிறார் திரு.கணேசன்

பணம் இல்லை என கைவிரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் (மருத்துவர் .திரு.செந்தில் )

0 comments


தொல்லை தாங்க முடியலப்பா

0 comments
தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் (திரு.வேலுசாமி) உள்ளாட்சி துறை அமைச்சருக்கு கடிதம்: அதன் நகல் மனுதாரர் திரு.கணேசனுக்கும் வருகிறது

மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சருக்கு திரு.கணேஷன் கோரிக்கை கடிதம் எழுதுகிறார்

0 comments

பதில் இல்லை - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கோரிக்கை மனுவின் நிலையை கேட்கிறார் திரு.கணேசன்

0 comments

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டதற்கும் பதில் இல்லை - மேல்முறையீடு செய்கிறார்

0 comments

மனு - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளர்ச்சி துறைக்கு - அனுப்பபடுகிறது

0 comments

சேப்பாக்கம் பயணிக்கும் மனு

0 comments
நகராட்சி நிர்வாகம்  மற்றும் குடிநீர் வளர்ச்சி துறையிலிருந்து  நகராட்சி நிர்வாக ஆணையரகம், சேப்பாக்கம் பயணிக்கும் மனு

மீண்டும் தர்மபுரிக்கு

0 comments
நகராட்சி நிர்வாக ஆணையரகம், சேப்பாக்கம் - திரு.கணேசனின் மனுவை தர்மபுரி நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்புகிறது - அதன் நகல் மனுதாரருக்கு வருகிறது

தர்மபுரி நகராட்சி அலுவலகத்திலிருந்து வரும் பதில்

0 commentsபதில் - திருப்திகரமாக இல்லை; மேல் முறையீடு

0 comments

நேரடியாக மாநில தகவல் ஆணையத்திற்கே மேல் முறையீடு செய்கிறார் - திரு.கணேசன்

மாநில தகவல் ஆணையதில்லிருந்து வரும் பதில்

0 comments

தலைமை செயலாளருக்கு கடிதம்

0 comments
நேரடியாக தமிழக தலைமை செயலாளருக்கு இதுவரை தான் அனுப்பிய மற்றும் பெற்ற கடிதங்களுடன் ஒரு கோரிக்கை  கடிதம் எழுதுகிறார் திரு.கணேசன்

கிடைத்தது வெற்றி

0 comments
போதும்டா சாமி : உனக்கு தேவை மேம்பாலம் தானே என்று நினைத்த தமிழக அரசு

24-12-2008 அன்று வெளயிட்ட  அரசானை எண்:  262 வில் மேம்பாலம் கட்டும் பணிக்கென 0.70 கோடி ரூபாய் (ரூ.70 இலட்சம் ) ஒதுக்கியது.

இது இவருக்கு கிடைத்த வெற்றி ;
விடா முயற்சி வெற்றி தரும் என்பதற்கு இது ஒரு மிகப்பெரிய உதாரணம்

அந்த அரசாணையின் நகல் 

தலைமை செயலகத்திலிருந்து கடிதம்

0 comments

முடிந்ததா திரு.கணேசனின் வேலை? இல்லை

0 comments
அரசானை தான் வெளி இடப்பட்டுவிட்டதே இனி என்ன வேலை என யோசிக்கிறீர்களா?

24-12-2008 அன்று அரசானை வெளிடப்பட்டுவிட்டது ஆனால் 25-05-2009 (ஐந்து மாதம்) ஆகியும் வேலை ஆரமிக்கவில்லை  புதிய மேம்பாலம் குறித்து தகவல் கேட்டு பொது தகவல் அதிகாரி, மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு மனு

0 comments

மனுவிற்கு பதில் அளிக்க கோரி மாவட்ட ஆட்சியாளர் அலுவலக பொது தகவல் அதிகாரி தர்மபுரி நகராட்சி ஆணையருக்கு அனுப்புகிறார்

0 comments
இதன் நகல் திரு.கணேசனுக்கும் அனுப்பபடுகிறது

பதில் வராததால் மேல்முறையீடு செய்கிறார்

0 comments

பதில் வருகிறது

0 comments
தர்மபுரி நகராட்சி ஆணையாளர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலக பொது தகவல் அதிகாரி மூலம் பதில் அளிக்கிறார்


பொருத்தது போதும் பொங்கி எழு

0 comments
அரசு அலுவலர்களின் அலட்சியத்தை கண்டு வேதனை அடைந்த திரு கணேசன் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார்/ வழக்கு தொடுகிறார்

சென்னை உயர் நீதி மன்ற ஆணை

0 comments


நகராட்சி நிர்வாக செயலாளர் சென்னை அவர்களுக்கு கடிதம்

0 comments

முதலமைச்சர் தனிபிரிவுக்கு - மனு

0 comments
சென்னை உயர் நீதி மன்ற ஆணையின் படி டெண்டர் கோரப்படாததால் முதலமைச்சர் தனிபிரிவுக்கு அணைத்து கடிதங்கள் மற்றும் நீதி மன்ற ஆணையுடன் ஒரு மனு அனுப்புகிறார்


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மனு

0 comments
மனு பெற்றதற்க்கான அத்தாட்சி கடிதம் கிடைத்ததே தவிர பதில் கிடைக்கவில்லை; பதில் தராததர்க்கான விளக்கம் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மனு அனுப்புகிறார் நமது திரு.கணேசன்


மீண்டும் மனு பயணம் செய்கிறது

0 comments
மனுவிற்கு பதில் அளிக்க கோரி முதலமைச்சர் தனிபிரிவு அதிகாரி நகராட்சி நிர்வாக துறை ஆணையருக்கு - உத்தரவு இடுகிறார் இதன் நகல் திரு.கணேசனுக்கும் அனுப்பபடுகிறது

வேறு வழியில்லை

0 comments
2010 ஜனவரியில் டெண்டர் கோரப்படுகிறது
(அரசானை வந்து 13 மாதங்கள் கழித்து )
சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்து 4 மாதங்களுக்கு பிறகு 

வேலை ஆரமிக்கப்படவில்லை

0 comments
டெண்டர் கோரப்பட்டு இரு மாதங்கள் முடிந்தும் வேலை துவங்கபடுவதர்க்கான  அறிகுறிகள் தென் படவில்லை

சென்னை நகராட்சி நிர்வாக ஆணையத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மனு

0 commentsபதில் இல்லை

0 comments

சென்னை நகராட்சி நிர்வாக ஆணையத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அனுப்பிய மனுவிற்கு வழக்கம் போல் பதில் இல்லை
மேல் முறையீடு செய்ய முடிவு 

மேல் முறையீடு

0 comments

மேல் முறையீடு பதில் அளிப்பதற்காக அவசரமாக டெண்டர் விளம்பரம் (மின்னஞ்சல் ஒப்பந்தப்புள்ளி )

0 comments

Copyright © S.Ganesan
Created by VINOTH & Website Sponsored by Indianpillars